என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாராளுமன்றத் தேர்தல்"
17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் முன்னிலை பெற்றனர். வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றார். இதேபோல் நட்சத்திர வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் துவக்கம் முதலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.
அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடந்தது. 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், 23-ந் தேதி 115 தொகுதிகளுக்கும், 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 6-ந்தேதி 51 தொகுதிகளுக்கும், 12-ந் தேதி 6-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இறுதிக் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து இருந்தது.
பீகார் (8), ஜார்க்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்குவங்காளம் (9), சண்டிகர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலபிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் இந்த 59 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 30-ந்தேதி இந்த 59 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2 வாரங்களாக இந்த 59 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வந்தது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் 8 மாநிலங்களிலும் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்கள். அதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோரும் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மாநில கட்சிகளின் தலைவர்களான மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். மேற்கு வங்காளத்தில் கலவரம் ஏற்பட்டதால் அங்குள்ள 9 தொகுதிகளிலும் நேற்று முன்தினமே பிரசாரம் ஓய்ந்தது.
மற்ற 50 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் கடந்த 2 மாதமாக பரபரப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றுள்ளது.
நாளை (ஞாற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இதற்காக 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல் 6 கட்ட தேர்தல் மூலம் 483 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. நாளை 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் 542 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெறும். பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வேலூர் தொகுதிக்கு மட்டும் பின்னர் தேர்தல் நடைபெறும்.
நாளை நடக்கும் தேர்தலில் சுமார் 10 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற் காக 59 தொகுதிகளிலும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
59 தொகுதிகளில் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளை சத்ருகன்சின்கா, ரவிசங்கர்பிரசாத், நிஷா பாரதி, பவன்குமார் பன்சால், சன்னி தியோல் ஆகியோர் தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த 50 தொகுதிகளிலும் 33 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவை மாநில கட்சிகளின் கடுமையான சவால் காரணமாக பாரதிய ஜனதா நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வர உள்ளனர். தேர்தல் தொடர்பாக 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார். #LokSabhaElectoins2019 #ElectionCommissioner
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 1587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 932 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 305 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 213 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மொத்தம் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் மார்ச் 27ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.50.20 கோடி பணம், 223 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பு மனுக்களை திரும்ப பெற நினைப்பவர்கள் இன்றும் நாளையும் மனுக்களை திரும்ப பெறலாம். நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். #LokSabhaElections2019 #NominationAccepted
இந்நிலையில் சென்னை யானைக்கவுனி, வால்டாக்ஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லோகேஷ் என்பவரிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், தண்டையார்பேட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls #ElectionFlyingSquad
இந்நிலையில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.
இதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். #ParliamentElection #ErodeConstituency #GaneshaMoorthy
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் சேருவது உறுதி ஆனது.
இதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார். #LSPolls #ADMK #PMKConstituencies
இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்களும் பங்கேற்றனர். சிறிது நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று மதியம் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி பியூஸ் கோயலும் மதியம் 12.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார். அவர்கள் இருவரும் நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. தலைவர்களை சந்தித்து கூட்டணி உடன்பாட்டை உறுதி செய்ய உள்ளனர். #LSPolls #ADMK #PMK
பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில கட்சிகளுடன் கூட்டணியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
பீகார், மராட்டியம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்துள்ள பா.ஜனதா தலைவர்கள் அடுத்தக்கட்டமாக தென் மாநிலங்களில் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.
தென்இந்தியாவை பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா கட்சிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய அளவில் எந்த கூட்டணியும் அமையவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே பா.ஜனதாவுக்கு பலமான கூட்டணி அமைய உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி ஏற்கனவே உருவாகிவிட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டணியை உருவாக்க கடந்த சில வாரங்களாக பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆளும் அ.தி.மு.க. தலைமையில் அந்த கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக அ.தி.மு.க. - பா.ஜனதா மூத்த தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேசி வந்தனர். அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் தலா 5 சதவீத வாக்கு வங்கிகளை வைத்துள்ள பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை சேர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இணைவது தொடர்பாக நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உடன்பாட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப அ.தி.மு.க- பா.ஜனதா தலைவர்கள் இன்று காலை தங்களது நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாற்றி அமைத்தனர்.
அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணி அறிவிப்பை வெளியிடும் ஏற்பாடுகள் இன்று காலை மும்முரமாக நடந்தன. இதற்காக இன்று காலை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுபோல 11 மணிக்கு மத்திய மந்திரி பியூஸ்கோயல் சென்னை வருவார் என்று தகவல்கள் வெளியானது. அதன்பின்னர் காலை 10 மணி அளவில் அமித்ஷாவின் தமிழக பயண திட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்று மத்திய மந்திரி பியூஸ் கோயலும் மதியம் 12.15 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் முதல்கட்டமாக அதிமுக-பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை கூட்டணி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்படும். அதன்பின்னர் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. #LSPolls #ADMK #PMK
கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்கள். பின்னர் இந்த சந்திப்பு பற்றி தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது இது மரியாதை நிமித்த மான சந்திப்பு என்றும் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார்.
‘தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட வேண்டுமா என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். ஆனால், நான் அடுத்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு தெரியப்படுத்திவிட்டேன்’ என்றார் சுஷ்மா.
உடல்நலக் குறைவு காரணமாக சுஷ்மா தேர்தல் அரசியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுஷ்மா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக தொகுதிப்பக்கம் வரவில்லை எனக் கூறி சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனை சுட்டிக்காட்டி நிருபர்கள் கேள்வி எழுப்பியதால், அவர் தனது முடிவை அறிவித்திருக்கிறார்.
சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆகலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த சுஷ்மாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு சிறுநீரகம் செயலிழந்ததையடுத்து, அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று ஆபரேசன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #SushmaSwaraj
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்